Saturday, September 27, 2008

இந்த பிரிவு போதும்....

உன்னில் நானும்
என்னில் நீயும்
வாழ்ந்தபோதும்
காலத்தின்கையில்
ஏன் சிக்கிக் கொண்டோம்
கற்பனையில் நீயும்
கனவுக்குள் நானும்
தற்காலிகபிரிவை
ஏன் பிரித்தோம்
உன்னை எனக்கும்
என்னை உனக்கும்
பிடித்தபோதும்
பிரிவுகள் இங்கே
ஏன் வந்தது
பிரித்த போதும்
உன் வரவிற்க்காய்
காத்து நிக்கின்றேன்

Thursday, September 4, 2008

காதல் தீவிரவாதி!!!

என் உணர்ச்சிகளை..
பூப்பறித்து..
பூப்பந்து விளையாடிய
என் தேவதையே
உன்னை
"காதல் தீவிரவாதி"
என அறிவிக்கிறேன்!
இனி..
வெளியில் உலவ உனக்குத் தடை
உனக்காக காத்திருக்கிறது
என் இதயமெனும் சிறை...

Wednesday, August 13, 2008

முதல் முத்தம்..

நினைவுகளிலேயே வாழ்கை கழிந்து விடுமோ
என்று பயமாய் இருக்கிறது...
அவள் தந்த முத்தத்தின் மிச்சத்தை
தேடி கொண்டே இருக்கிறது மனம்...
ஒருவேளை இந்த உலகத்தின் காதலர்கள்
பரிமாறி கொள்ளும் முத்தங்களில் ஒளிந்திருக்கலாம்...
ஒவ்வொரு நொடியும் எங்கேனும்...
காதலர்களிடையே வாழ்கிறது....
அவளுடைய முத்தத்தின் மிச்சம்....
கடற்கரை மணலில் அலைகள் விட்டு சென்ற ஈரம் போல...

Wednesday, August 6, 2008

என் நெஞ்சில் நீ...

உன்னை
உயிர்ப்படக்காட்சியாக
வார்த்தெடுத்து
வைத்துள்ளேன்
நெஞ்சில்

பின்
எதுக்கடி உன்
உயிரற்ற
புகைப்படங்கள்
எனக்கு...?

Sunday, August 3, 2008

தேவதையின் கால்கள்...

நான் தெரிந்தே
காலினை மிதித்து

தொட்டு கும்பிடும்
வேளைகளிலெல்லாம்

கால்களை ஒழித்துக்கொள்கிறாய்
சேலைகளுக்குள்

இன்றுவரை
காணமுடியவில்லையடி

தேவதையே உன்
கால்களை..

Friday, August 1, 2008

மெல்லியவளே...!!

என் ஒவ்வொரு
அனுவினிலும் நீ

உடைக்க நினைக்காதே

அவை இரண்டெனப்பிளந்து
தரும் காதல் வெப்பத்தை
தாங்கமாட்டாய்

மெல்லியவளே!

Friday, July 25, 2008

என் கவிதேவதையே...!

என்னை எழுத
வைத்தவள்
நீ என்றாலும்
நான்
கவிஞனானது
உன் பேர்
சொல்லிப்பார்த்துதான்

உன்னைப் பற்றி
எழுத
நினைத்தபோதெல்லாம்
எழுதிக்
கொண்டேயிருந்தேன்
உன்னை விட
அதிகம்
எழுத நினைத்தேன்
எழுதுவதையே
மறந்துவிட்டேன்

Thursday, July 24, 2008

அருமையானவளே...!

நீ
எங்கெல்லாம்
என்னைத் தேடுகிறாய்
என்பதை
ரசிப்பதற்காகவே
நான் தொலைந்து
போகலாம்

நீ
வந்தவுடன்
கை கொடுப்பதா
கன்னம் கொடுப்பதா
என்ற குழப்பத்தை
சாதுரியமாய்
தீர்த்து வைத்தாய்
கைகூப்பி
வணக்கம் சொல்லி.....

காணும்போதே.....கரைந்தாயே!

Wednesday, July 23, 2008

உன் வாசகன் நான்...!

எத்தனையோ பேர்
படித்து
எதுவும் கூறாமல்
போன என்
கிறுக்கல்களைத்
தேடி நீ கவிதையாக
வாழ்த்தியதில்தான்

கிறுக்கன் நான்
உன் கவிவாசகன்
ஆனேன்.

Sunday, July 13, 2008

அன்பே...!

உன்னைத் தேடி கிறுக்கிய
கிறுக்கல்கள் எல்லாம் உன்னைக்
காட்டிக் கொடுத்துவிட்டு
தலைமறைவாகிவிட்டன


அவைகளை நீ படித்தால்
எழுதிய என்னை உனக்கு
பிடிக்காமல் போய்விடுமோ
என்ற பயத்தில்..

Monday, July 7, 2008

முதல் நாள்

இதயம் சேகரித்துக்
கொண்டிருந்த
வானத்தில்
நீ
பறக்கத் துடிக்கையில் அசைந்த
புற்களின்
நடுவேதான்
அமர்ந்திருந்தது
நம் நட்பின்
முதல்
நாள்

-அறிவுமதி